Monday, May 21, 2007

My First US Trip


Hi All,

Finally I got a chance to write a blog abt my very first travel on flight. Its gr8 and nervous feel to be onboard for my very first time in my life. I board on the Air India (later known as Indian Airlines) from chennai to singapore....

As Usual after baggage check in and other formalities I entered the gate. To My shock there was an announcement " 2 Hours Delay" .I am tooo tensed to hear such a news since I got to got my next flight to Hongkong from Singapore in next couple of hours. After nail bitting 2 hours delay the flight take off from the Chennai Airport.

Opps I cant explain wht I felt that time ... Me Flying ....Yahooooo........

Once the flight reaches the height Captain asks us to get out of the seat belt if u wanna soo.Me get out of it and wanna to walk on the flying flight. So had a small walk from my seat to the cock pit ...Appadiyae parakura mathri feel ya chaa ...

I Njoyed the each and every second of the fly. Its nearly 4 hr travel finnaly reached sigapore before my depature of my next flight to Hongkong. I rushed upt to the next gate for my next flight. Aiyaaa Sami singapore Airportaaa Athu chumma kadal mathri irku I have to walk a mile to reach my next gate.









Finally after a long walk :-( I reached the hongkong flight gate..

This one is cathaypacific Airlines. Flight sounds too bee tooo gud when compared to our indian airlines. Comfortable seats,Beatiful crews, Soundless travel etc... But Take off and Landing are tooo gud in our Indian Airlines these ppl can never never come up to our level in landing the flights. Our ppl do it very smothly were incase of cathy pacific there was a strong jerk when we landed in Hongkong I taught we lost the track. Also During this travel there was a heavy wind Strom so lot of jerk in the travel I am very thrilled on such occassions. finnaly I landed safely in Honkong.

In an hour again I have to catch my next flight to SFO ( Sanfranscisco )its become bored to be again in flight but I have no other option. This time its a long travel about 13 hrs. This time also its Cathy Pacific the food serverd here is too bad for the veggies .. ippa feel pannen abt the food supplied ny the Indian Airlines they served a plate of Idilly,sambar and Vada.. Apa athoda importance triyama atha sapdama parku parthutu iruthaen ippa atha ninaika ninaikaa sema kdiya iruthathu eppa da kila irakuvom annan veetuku poi nalla sapduvom nu thonuchhu...Eppadiyo inga anga nadathu 13 hrs travelaaa thandi flight land aachuu..What a sight runway was along the costal side such a abeautiful secene oru valiyaaa emigration ellam mudhicu veliya vanthaen....

Will Update the rest ASAP ..Velai Iruku Sami ..Please nambuga na eppavathu velai seivanen.....






Friday, May 18, 2007

Two Wheeler Driving

Maga Janaalae...Paruga nanum intha bloga updatedaa vachukanum than parkuraen ana paruga itha busy scedulelaa timea kidaika matikuthu seri seri nee neega monaguratu inga kaetkuthu enna panna nambithan aganum nanum veelai seivaen..

Seri materku varuvom ..

Ithunala makaluku na solla ninaipathu ennana na puthu vandi vangitaennnnn.. Pulsar 150 CC ..chuma sollakudathu vandi chumma sigam mathri..iruku I mean parka bayama iruku..sami enna kanagam kanakuran paavi mavan Chumma solluvanga a perfect male nu :)

Its really a nice exp to drive the Pulsar in Chennai Roads ..Eppa evan vanthu ulla viluvanu triyathu nama evan kita eppo thitu vanguvom nu triyathu.. Innaki roomla iruthu kilambu pothae innaiku evanavathu motha poran nu thonuchu athae mathri kilambi oru 5 nimisam kuda irukathu...Oru cyclist vanthu chumma naachunu idicahn paruga..nalla vlai kila vilugalae "enga iruthu than varuvangalooo " appadinu avanu thititu na konjam speed raise panni en paguku innoru two wheelaerla mothinaen ..ippo avan turn avan manasula sonnathu ennaku kaetatu
"enga iruthu than varuvangalooo " nu avan sonanthu .

Enna panna arasiyal nu vanthu ta ithu ellam sagam thana ithuku bayatha chennai la vandi otta mudiyumaa..enna panna daily uyira pudichutu oturathaluyum oru Sugam iruku..Enjoy ur driving in Chennai Roads...
Have a safe Driving :))

Friday, April 27, 2007

Ithu than Valkaiyooo :-)

hmm makalae roomba nal achu intha blog pakkam vanthu..enna panna ungaluku than triyumae veali nu vanthutaa intha uthand vera etha pathiyum ninaika matanu..Dei unnnaku ennada appadi velai nu neega unaga manasula kaetkurathu ennaku kaetkuthu :-)

onnum perusa illa valakam pola intha work bored of this task... Oru valiya ennnoda joope product last week relase achu..apada velai mudichathunu ellam dev and test team mu jollyaa irukaa nama nilamai appadiyae konjam kuda matram illa..Intha Team la serthathula iruthu rest break free time appadinu ethuvumae kidayathu ..cha ennathan automationoooo..Ipaa ennadanaa ellam featureyum automate pananumam.. seri athuvum nalla than Iruku antha velayum arabichachu...

Seri roomba work pannuraomaenu ninachu Papera Puratinaen last week "Koodal Nagar" Koodal Nagar oru pudhu padam vanthu iruku poi paruga nu sonnauga...Nanau avagala nambiiiii antha padathuku ponaen ..anga ponaaa paavi payanuga padama eduthu vachu irukanigaaa cha athuku na week end kuda vanthu officela velai parthu irupaen..sami appadi oru kodumai...oru valiyaa adichu pudichu veetuku odivanthutom....Eppadiyavathu antha thuyaratha marakanum nu ninachu " Unnalae Unnale " Padathuku polam nu soli ticketku try panna ticktae kidakala..Oru valiyaa Sathyam laaa Online booking ....cha namakagave vachu irukanuga paa..ticket book pani sunday nite padathuku ponom...
Chumma sollakudahtu padam jooper..Ennaku roomba pudichu Iruthathu..Lovely camera and screen play..santhosama :-) veetuku poi thugiyachu 2 3o maniku..Kalaila ethirikum pothu than antha kastam triyuthu :-( kastapatuu office vanthaen 11 maniku vantha udanae meeting :-( cha yaru than itha kandu pudichagalooo triyala..valakalm pola dose vangitu velaya arambichaaaa

pathu nimisathula frds kootam vanthuruch Lunchku...:-)

Will contiue later

Monday, December 04, 2006

Thoral - Tamil Story

தூறல்!!!
டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது...

வழக்கம்
போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.

இந்த
மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல... மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க... அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.

அருகே
கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.

கடைசியாக
சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ
என்ன பொண்ணு இவ... யாராவது பார்த்தா... உடனே சிரிக்கணுமா???

பஸ்
வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்... i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக
எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்... வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

மேனேஜர்
சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.

சரியாக
11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் "C" போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக
வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.

மதியம்
சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.

"
கார்த்திக்... இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?" அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.

"
சாரி... நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே... எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு" சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு
என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.

அருகே
இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம்
போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.

பஸ்
வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.

"
ஹாய்... நான் இங்க உக்காரலாமா?" ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி
பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.

வழக்கத்தைவிட
i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம்
செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.

அன்றும்
லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

இதுங்களுக்கு
எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.

சரி
, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.

எப்போழுதும்
அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.

"
ரொம்ப தேங்கஸ்ங்க..." தயங்கியவாறே சொன்னேன்.

"
!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்" புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.

"
இல்லைங்க...சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்"

"
ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க...
பை
வே, அம் ஆர்த்தி"

"
அம் கார்த்திக்"

இன்று
பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.

பஸ்ஸிலிருந்து
இறங்கியவுடன்...

"
கார்த்திக்... உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க"

"
உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க"

"
ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்"

"
சரிங்க"

"
பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க"

"
சரி... போலாமா?"

சாப்பிட்டு
விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.

அடுத்த
நாள் மீண்டும் பஸ் பயணம்...

"
ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்... தனியா சாப்பிட்டு இருந்த... உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?"

"
நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்"

"
ஏன்?"

"
யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது"

"
யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?"

"
வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்"

"
இல்ல... யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்"

"
ஏன்கிட்ட செல் போன் இல்ல"

"
என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?"

"3
வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்"

"
சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு... " குறித்து கொண்டாள்

காலையும்
, மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்... இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.

அடுத்த
நாள்...

"
ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?"

"
ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்"

"
சரி... இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்"

"
எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?"

"
நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்... ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல"

"
நிஜமாவா?"

"
ஆமாம்... சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்"

"
சரி..."

வார
இறுதியன்று கடைக்கு சென்றோம்...

"
லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ... இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்"

"
எனக்கு சாதரண மாடலே போதும்... காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்"

"
நீ சும்மா இரு...நான் செலக்ட் பண்றேன்... உனக்கு ஒன்னும் தெரியாது"

"
சரிங்க... நீங்களே எடுங்க"

கடைசியாக
பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது... ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.

"
பாத்தியா... உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்"

"
சரி சரி... எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க... வா போகலாம்"

அன்றே
5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.

வீட்டிற்கு
சென்றவுடன் போன் செய்து பேசினாள்...

திங்கள்
காலை அலுவலகத்தில்

"
கார்த்திக்... புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு...கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு" ஹாசினி

"
ஆமாம்... நேத்துதான் வாங்கினேன்"

"
எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?" ராஜிவ்

"
உங்களுக்கு இல்லாமலா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க..."
அனைவரும்
அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.

ஆர்த்தியிடமிருந்து
11 மணிக்கு போன் வந்தது.

"
கார்த்திக்... இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி...
நான்
மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"

"
ஓகே... நான் பாத்துக்கறேன்"

"
கார்த்திக்... புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க... ஏதாவது விசேஷமா?" மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.

"
அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க... சும்மா வாங்கனும்னு தோனுச்சு... வாங்கிட்டேன்"

"
சரி... இன்னைக்கு டீம் லஞ்ச்... எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்"

"
ஷுர்... கண்டிப்பா வரேன்"

மதியம்
அனைவரிடமும் நன்றாக பேசினேன்... எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க... நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு...

வாழ்க்கையில்
ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு
மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.

"
கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்... எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?"

"
ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?"

"
அதெல்லாம் ஒன்னும் இல்ல... எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... அதனால சொன்னேன்"

"
சரி... அப்ப அப்ப போன் பண்ணு"

"
கண்டிப்பா பண்றேன்"

அவள்
சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து
போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.

"
ஹலோ கார்த்திக்கா???"

"
ஆமாம். நீங்க யார் பேசறது?"

"
நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்... நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்" அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது

"
கடைசியா???" இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
"
ஆர்த்திக்கு என்னாச்சு???"

"
நீங்க இங்க வாங்க... அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல... சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க... நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்"

அந்த
நம்பர் மனதில் பதிந்தது...

சென்னைக்கு
அப்போழுதே நேராக புறப்பட்டேன்...

ஹாஸ்பிட்டலுக்கு
அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.

ஹாஸ்பிட்டலில்
காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்... என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.

எனக்கு
என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

"
கார்த்தி... அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு"

"
ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல"

"
நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்"
ஒரு
நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்

"
அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே... உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல."

"
ஆர்த்தி... உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட"

"
ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்...
நீ
பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி... என்ன சரியா???"

ஒரு
வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்...

காலை
7 மணி...

வழக்கம்
போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.

"
ஹாய்... நான் இங்க உக்காரலாமா?"

"
தாராளமா"

"
என் பேர் கார்த்திக்..."

"
நான் பாலாஜி..."

(
ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்...)